ஆலய தேர்தலில் ஓட்டு போடாத பெண் மீது தாக்குதல்  

வெள்ளி சந்தை அருகே கிறிஸ்தவ ஆலய பங்கு பேரவை தேர்தலில் தனக்கு வாக்களிக்காத பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Update: 2024-04-16 03:23 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை அருகே அழிக்கால் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். இவர் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பங்கு பேரவை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதில் அதே பகுதியை சேர்ந்த பீட்டர் ஜான் மனைவி ஹெப்சிபா என்பவர் ஜான்சனுக்கு ஓட்டு போடவில்லை என தெரிகிறது.      இதனால் ஆத்திரமடைந்த ஜான்சன், ஜோசப், மேரி விமலா  மற்றும் மேரி ஆகிய நான்கு பேரும் சம்பவ தினம்  ஹெப்சிபாய் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தபோது தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News