8ம் வகுப்பு மாணவியை பைக்கில் கடத்த முயற்சி.

குமரியில் 8ம் வகுப்பு மாணவியை பைக்கில் கடத்த முயற்சி.;

Update: 2023-12-01 12:03 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம்  நட்டாலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் நட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து அந்த பகுதியில் உள்ள புதுக்குளம் நான்கு வழி சாலை பகுதி வழியாக வீட்டுக்கு  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவியின் எதிரில் பைக்கில் வந்த நபர்கள் மாணவியை கடத்தும் வகையில் அவரது கையை பிடித்து இழுத்து பைக்கில் ஏற்ற முயன்றுள்ளனர்.       

Advertisement

ஆனால் மாணவி சுதாரித்து அவர்கள் பிடியில் சிக்காமல் கூச்சலிட்டு உள்ளார். இதனால் பைக்கில் வந்த நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி உள்ளனர். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  மாணவியின் தந்தை உடனடியாக மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.        

ஏற்கனவே குமரியில் கடந்த 10 நாட்களுக்கு முன் மணவாளக்குறிச்சி பகுதியில் மாலையில் டியூஷனுக்கு சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவரை கடத்தும் முயற்சி நடந்தது.  அந்த சம்பவம் தொடர்பாக எந்தவித துப்பும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் நட்டாலம் பகுதியில் எட்டாம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி நடந்துள்ளது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து குமரி மாவட்டத்தில் நடந்துள்ள இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News