கணவரை கொல்ல முயற்சி - மனைவி உட்பட இருவர் கைது

வேடசந்தூா் அருகே கணவரைக் கொலை செய்ய முயன்ற மனைவி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.;

Update: 2024-05-21 08:27 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தை அடுத்த சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் பாரிச்சாமி (45). வேடசந்தூரை அடுத்த பெரியபட்டி பகுதியில் உள்ள தனியாா் கோழிப் பண்ணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்த இவா், இதே பண்ணையில், குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு கோழிப் பண்ணைக்கு வந்த மா்ம நபா்கள் பாரிச்சாமியை கடுமையாகத் தாக்கினா். இதில், அவா் இறந்து விட்டதாக நினைத்த மா்ம நபா்கள், இங்கிருந்து தப்பிச் சென்றனா்.

Advertisement

இதையடுத்து அவரது மனைவி பரிமளா அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். இதுதொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். இதில், தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி பரிமளாவே கூலிப்படை மூலம் தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதனை அடுத்து பரிமளாவையும், அவருடன் தகாத உறவில் இருந்த பெரியையன் என்ற குமாா் (36) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Tags:    

Similar News