ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி: 45 பேர் கைது

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவிற்கு வருகை தந்த ஆளுநருக்கு கீழ்வேளூர் அருகே கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்தியா கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 45 பேரை போலீசார் முன்கூட்டியே கைது செய்தனர்

Update: 2023-12-23 09:03 GMT

கருப்பு கட்ட முயன்றவர்கள்

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா தென்கிழக்கு ஆசியாவின் ஞான தீபம் என்று அழைக்கப்பட்டு வருகிறது இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா கோலகாலமாக கொண்டாடப்படும்.

இதே போல் இந்த ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றுடன் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது 16ஆம் தேதி காலை முதல் சந்தனக்கட்டை  அரைக்கும் பணி நடைபெற்றது.

நேற்று 22 ஆம் தேதி கடற்கரையில் பீர் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதைத்தொடர்ந்து இன்று 23ஆம் தேதி சந்தனம் பிழிதல் நிகழ்ச்சியும் இரவு தஞ்சாவூர் அரண்மனையில் போர்வை போற்றுதல் மற்றும் தங்க போர்வை போற்றுதல்  நடைபெறுகிறது.

கந்தூரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு தேவையான சந்தன கட்டைகளை நாகூர் தர்காவிற்கு வழங்கியது இந்நிலையில் இன்று சந்தனக்கூடுவர்களும் நடைபெற உள்ளது இந்நிலையில் நாகூர் கந்தூரி விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவி சென்னையில் இருந்து இன்று காலை திருச்சி விமான நிலை வந்தடைந்தார் அங்கிருந்து காரில் திருவாரூர் வந்த ஆளுநர் ஆரன் ரவி திருவாரூரில் காலை உணவை முடித்துவிட்டு அங்கிருந்து கார் மூலம் நாகூர் தர்காவிற்கு சென்றார்.

செல்லும் வழியில் கீழ்வேளூரில் திருவாரூர் நாகை பைபாஸ் சாலையில் கீழ்வேளூர் கச்சகம் சாலை சந்திப்பில்தமிழ்நாடு ஆளுநர் ஆர என் ரவிக்கு மார்க்சிஸ் ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மரகிமுதத்து காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்த ராஜா தலைமையில் கங்கிரஸ CPM, CPI, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் சன்பரிவார் இயக்கங்களின் ஏஜெண்டாக செயல்படுவதை கண்டித்தும் தமிழ்நாடு ஆளுநர் ரவி எதிராக அவர் வருவதற்கு   முன் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் 15 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை கைது செ ய்தனர் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்தனர்.

Tags:    

Similar News