கொலை முயற்சி வழக்கு- 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 03.03.2024 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விஷ்ணு (24) மற்றும் ஒருவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கடந்த 04.03.2024 அன்று தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணி நகர் ஜங்ஷன் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தட்டார்மடம், முதலூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் லிவிங்ஸ்டன் சாமுவேல் (எ) பட்டு (23) என்பவரை தட்டார்மடம் காவல் நிலையப் போலீசார் கைது செய்தனர்.
மேற்கண்ட வழக்குகளில் கைதான இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட கோ. லட்சுமிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் ௨ பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.