தந்தை, சகோதரர் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி; 2 பேர் கைது!

ஓட்டப்பிடாரம் அருகே காரை ஏற்றி தந்தை, சகோதரர் உள்ளிட்ட 3 பேரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-12-06 09:06 GMT

ஓட்டப்பிடாரம் அருகே காரை ஏற்றி தந்தை, சகோதரர் உள்ளிட்ட 3 பேரை கொல்ல முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரி சுந்தரலிங்கநகர் சித்திரை வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆறுமுகராஜ்(23). இவர் வடக்கு பரும்பூரில், அவரது அண்ணன் ராமகிருஷ்ணமூர்த்தி நடத்தி வரும் ஓட்டலில் மாஸ்டராக கடந்த மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார். ராமகிருஷ்ணமூர்த்தி மனைவி மகேஸ்வரி, ஆறுமுகராஜை அவதூறாக பேசியதால் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதையடுத்து ஆறுமுகராஜின் தந்தை சுப்பிரமணியன், தம்பி இசக்கிராஜ் ஆகியோர் பரும்பூரில் உள்ள ராமகிருஷ்ணமூர்த்தி ஓட்டலுக்கு சென்று பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராமகிருஷ்ண மூர்த்தியின் மைத்துனர் மணிகண்டன் தாக்க முயன்றுள்ளார். இதுதொடர்பாக, ஓட்டப்பிடாரம் போலீசில் புகார் அளித்துவிட்டு ஆறுமுகராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான நெல்லை அருகே உள்ள மணிமூர்த்திஈஸ்வரம் சென்று கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து சுப்பிரமணியன், இசக்கிராஜ் அவரது மனைவி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் கொம்பாடி ஊருக்கு மேற்கே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் ராமகிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த கார், சுப்பிரமணியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

Advertisement

இதில், சுப்பிரமணியன், இசக்கிராஜ், அவரது மனைவி ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். காயம் அடைந்த 3 பேரையும் ஆறுமுகராஜ் , அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளஇக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மணிகண்டன், அரிவாளை காட்டி ஆறுமுகராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகராஜ் அளித்த புகாரின் பேரில் மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணமூர்த்தி(26), மணிகண்டன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News