எடப்பாடி பழனிச்சாமி உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி

இராசிபுரம் அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் வீட்டிற்க்கு இரண்டு சொகுசு கார்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2024-02-12 01:41 GMT

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், அடுத்த நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ் (32). இவர் தற்போது குடும்பத்துடன் சேலத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தந்தை செல்வக்குமார்(60)தாய் விஜயலட்சுமி(55) நிறை மாத கர்ப்பிணியான அருண்பிரகாசின் சகோதரி அருள்ரம்யா(27) வசித்து வருகிறார் . அருண்பிரகாஷ் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 12.20 மணி அளவில் 2 செகுசு கார்களில்10 பேர்கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் வெளி கேட்டை உடைத்து உள்ளே புகுந்து தோட்டத்த வீட்டிற்குள் செல்வதற்காக வீட்டின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து விட்டு இரும்பு கேட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இருப்பு கேட் உடைக்கும் சத்தம் கேட்கவே வீட்டில் இருந்த அவரது மனைவி, மகள் மற்றும் பெற்றோர்கள். மர்ம நபர்களை கண்டு கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கொள்ளை அடிக்க வந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

சம்பவம் குறித்து ஆயில்பட்டி காவல்துறைக்கு அருண் பிரகாஷின் தந்தை செல்வகுமார் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் CCTV காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மேலும் தப்பி சென்ற கும்பலை பிடிப்பதற்காக இராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளார் விஜயகுமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News