வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயற்சி !

மதுபோதையில் வேலை கிடைக்காத விரக்தியில் கத்தியை வயிற்றில் குத்தி கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.;

Update: 2024-06-03 11:49 GMT

தற்கொலைக்கு முயற்சி

சேலம் கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் சத்தியராஜ் (வயது 35), சுமைதூக்கும் தொழிலாளி. இவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் அவ்வப்போது கிடைக்கும் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தினமும் மது அருந்திவிட்டு வந்து, தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்று உறவினர்கள், நண்பர்களிடம் கூறி புலம்பி வந்துள்ளார். நேற்று முன்தினம்மதுபோதையில் வீட்டிற்கு வந்த சத்தியராஜ், வேலை கிடைக்காத விரக்தியில்இருந்துள்ளார்.

Advertisement

அப்போது, திடீரென வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தனது வயிற்றில் குத்தி கிழித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் வயிற்றில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதையடுத்து சிகிச்சையில் உள்ள சத்தியராஜ் மற்றும் அவரது உறவினர்களிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி கத்தியால் வயிற்றை குத்தி கிழித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News