கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
பொன்னமராவதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-30 09:10 GMT
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடந்தது. சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ராசு, கரு .பஞ்சவர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏனாதி ராசு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் ஜீவா னந்தம், மாநிலக்குழு உறுப்பினர் அரசப்பன், திரு மயம் ஒன்றியத்தலைவர் தங்கமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.100 நாள் வேலைத்திட்டத்துக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும், பயனற்ற உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயத் தொழிலாளர் நல வாரியத்தை அமைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஒன்றிய பொருளாளர் பழனிச் சாமி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.