ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

Update: 2023-11-02 10:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ, கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்ஜோதி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 01.04.2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்க்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஊர் புற நூலகர்கள் கல்வி துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் எம்ஆர்பி செவிலியர்கள்,

சிறப்பு ஆசிரியர்கள் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பட்டதாரி முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராமர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகி செல்வகுமார் சாலை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாக சுப்பிரமணியன் வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மரியதாஸ் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News