சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள் ஏலம் - நகராட்சி அறிவிப்பு
Update: 2023-11-30 08:51 GMT
விழுப்புரம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள், தாங்கள் வளர்க்கும் மாடுகளை சாலைகளில் நட மாட விடக்கூடாது. சாலைகளில் நடமாட விடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாகவும், விபத்துகள் ஏற்பட வாய்ப்பாகவும், பொது சுகாதாரத்திற்கு கேடு விளை விப்பதாகவும் உள்ளது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு அகத்திக்கீரை போன்ற தீவனங்கள் ஏதும் பொதுமக்கள் வழங்கக்கூடாது. எனவே மாடு களை வளர்ப்பவர்கள், அவரவர் சொந்த இடத்தில் கட்டி வளர்க்க வேண்டும். சாலைகளிலோ, பொது இடங்களிலோ நடமாட விடுதல் கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவைகள் பிடிக்கப்பட்டு அன்றைய தினமே ஏலம் விடப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.