வரதராஜ பெருமாள் கோவில் வஸ்திரங்கள் ஏலம்
6 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு வஸ்திரங்கள் ஏலம் போனது என, கோவில் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-04-10 02:51 GMT
வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோவிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயாருக்கு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் வாயிலாக கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற வஸ்திரங்களின் ஏலம், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நேற்று, காலை 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடந்தது. இதில், மொத்தம் 6 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய்க்கு வஸ்திரங்கள் ஏலம் போனது என கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.