காவல்துறை சார்பில் வாகனங்கள் ஏலம்
சென்னை காவல் நிலையத்திற்கு உட்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் மார்ச் 14ம் தேதி பகிரங்க ஏலம் விடப்படுகின்றன.
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 682 வாகனங்கள் (இரு சக்கர வாகனங்கள் 661, மூன்று சக்கர வாகனங்கள் 17 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 4) சென்னை புதுப்பேட்டை காவல் ஆயுதப்படை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்கள் மார்ச் 14ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு மார்ச் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள அட்டை மற்றும் GST பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
மார்ச் 14 ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலம் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.