ஆவூர் பெரியநாயகி அன்னை சர்ச்சில் பாஸ்கா திருவிழா!
ஆவூர் பெரியநாயகி அன்னை சர்ச்சில் பாஸ்கா திருவிழா நடைபெற்றது.
Update: 2024-04-05 06:29 GMT
புதுக்கோட்டைமாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஆவூரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதபெரியநாயகி அன்னை சர்ச் உள்ளது. இங்கு இயேசு கிறிஸ்துவின் வாழ்வு பிறப்பு உயிர்ப்பை எட்டுத்திக்கும் பறைசாற்றும் விதமாக 1691 ஆம் ஆண்டு முதல் மேடை நாடகம், பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற கலைகளை எடுத்துரைக்கும் வகையில் பாஸ்கா திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பாஸ்கா தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை வேலைகளில் பங்குருக்கள்கள் திருப்பலி நிறைவேற்றி வருகின்றனர். பாஸ்கா திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி ஆன ஆண்டவரின் திருப்பாடுகளான மழைப்பொழிவு, இறுதி இரவு உணவு, போதனைகள் புதுமைகள் பாடுகள், மரணம் மரித்த இயேசுவின் இறுதி ஊர்வலம் உள்ளிட்ட உள்ளத்தை உருக்கும் காட்சிகள் நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை மலர் மாலைகள், வண்ண மலர்கள், தோரணங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று சக்கர பவனி நடக்கிறது. இரவு பத்து முப்பது மணி அளவில் ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்கர் நடக்கிறது.