சரக்கு ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து - சரக்கு ஓட்டுனர் பலி
சரக்கு ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சரக்கு ஓட்டுனர் சம்பவ பலி
Update: 2024-03-24 13:24 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள எலிமேடு அருகே ராசிபுரத்திலிருந்து திருச்செங்கோடு நோக்கி மாட்டின் தோல்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. வழியில் முன்னே சென்ற காரை முந்த முயன்ற போது முந்த முடியாமல் தாறுமாறாக ஓடி எதிரில் திருச்செங்கோட்டில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சரக்கு ஆட்டோ முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநர் இடிபாட்டுக்குள் சிக்கிக் கொண்டார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஓட்டுநரை பரிசோதனை செய்த போது அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இதனை அடுத்து ஈடுபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. லாரியில் கயிற்றை கட்டி சரக்கு ஆட்டோவின் முன் பகுதியை பிரித்தெடுத்தனர். இறந்தவரின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்தவர் பெயர் மணிகண்டன் 31 என்பதும் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி அடுத்த பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.