வெண்ணைமலை கொங்கு ஹையர் செகண்டரி பள்ளியில் பரிசளிப்பு விழா

வெண்ணைமலை கொங்கு ஹையர் செகண்டரி பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-07-01 15:41 GMT

பரிசளிப்பு விழா 

வெண்ணைமலை கொங்கு ஹையர் செகண்டரி பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் கொங்கு ஹையர் செகண்டரி பள்ளியில் ஸ்மார்ட் செஸ் அகாடமி 7-வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் மற்றும் திறந்த நிலையிலான 2024 ஆம் ஆண்டுக்கான செஸ் போட்டி, கரூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட செஸ் அசோசியேசன் தலைவரும் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் ஆன அட்லஸ் நாச்சிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், கொங்கு ஹையர் செகண்டரி பள்ளியின் தாளாளர் பாலகுருசாமி, தமிழ்நாடு செஸ் அசோசியேசன் செயலாளர் ரமேஷ், கரூர் மாவட்ட எஸ் அசோசியேசன் செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ராஜா,

அகில இந்திய தலைமை பயிற்சியாளர் உமாபதி, துணை பயிற்சியாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News