பாரம்பரிய சின்னம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பாரம்பரிய சின்னம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2023-11-26 10:05 GMT
பாரம்பரிய சின்னம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பாரம்பரிய சின்னங்களின் சிறப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றை பாதுகாக்கவும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஏப்., 18ம் தேதி, சர்வதேச பாரம்பரிய நாளாகவும், இந்தியாவில், நவ., 19ம் தேதி முதல், நவ., 25ம் தேதி வரை, சர்வதேச பாரம்பரிய வாரமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்லவர் கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் உள்ள மாமல்லபுரத்தில், தொல்லியல் துறை சார்பில், சர்வதேச பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, நேற்று, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில், மாமல்லபுரம் தனியார் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தொல்லியல் அலுவலர் ஸ்ரீதர், மாமல்லபுரம் சிற்பங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது குறித்து விளக்கினார். அதைத் தொடர்ந்து, பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது குறித்து, மாணவர்கள் கட்டுரை எழுதினர்.

சிற்பங்களை ஓவியமாக தீட்டினர். சிறந்த படைப்பாளர்களுக்கு, இன்றைய விழாவில், சான்றிதழ் மற்றும் பரிசு அளிக்கப்படும் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News