தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு !
வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 09:20 GMT
தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு
தமிழகம் முழுவதும் தற்போது வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளது. இதனால் வனப்பகுதியில் தீ விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வனப்பகுதியில் காய்ந்த சருகுகளை அப்புறப்படுத்துதல், ரோந்து செல்லுதல் போன்ற பணிகளை வனத்துறை தீ தடுப்பு காவலர்கள் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, சேலம் தெற்கு, வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, மேட்டூர், தம்மம்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள வனக்கிராமங்களில் தீ தடுப்பு குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வனத்துக்குள் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க தீ தடுப்பு கோடுகள் வெட்டப்பட்டு வருகிறது. வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வனப்பகுதியில் தீ வைப்போருக்கு வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்றனர்.