மலேரியா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் மலேரியா மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
Update: 2024-06-03 04:39 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் மலேரியா மருந்து தெளிக்கும் பணி வட்டார மருத்துவ அலுவலர் செல்லின் மேரி தலைமையில் நடைபெற்றது. வாழவச்சனூர் பா.ஊ.சா. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
மலேரியா நோய் தடுப்பது குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் பூச்சியல் துறை வல்லுநர்கள், மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.