அரசு மருத்துவமனையில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில், சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் விதமாகவும், பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், நோயாளிகளுக்கு மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் மையம் சார்பாக 10 ஆவது யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனா நியூட்டன் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டு, பிளாஸ்டிக் பையை தவிர்க்கும் விதமாக நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் மூலிகைச் செடிகள் வழங்கினார். இதில் மருத்துவர் சரவணன், சுமதி, மருந்தாளுநர் செழியன், செவிலியர் கண்காணிப்பாளர்கள், மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.