மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு
Update: 2023-11-30 08:57 GMT
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு கருத்தரங்கத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி 400 மஞ்சப்பைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் முன்னிலையில் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் க.கணபதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்திரா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயற்பொறியாளர் ப.ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அ.சேகர், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயஸ்ரீ ஜெயபாலன் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.