அரசுப்பள்ளியில் ஓவிய கண்காட்சி குறித்த விழிப்புணர்வு

மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரம்பரிய ஓவிய கண்காட்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-01-04 01:18 GMT

மயிலாடுதுறை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் பாரம்பரிய ஓவிய கண்காட்சி குறித்த விழிப்புணர்வு நடந்தது. 

மயிலாடுதுறை அருகே உள்ள தேரிழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியகண்காட்சி விழிப்புணர்வு நடந்தது.

தமிழக அரசால் கலை வளர்மணி என்ற விருதைப் பெற்ற ஓவியத்தின் நுன்கலை பயிற்றுநர் மாதவன் கலந்து கொண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஓவியங்கள் வரைவது மாறிவரும் நிலையில் கையால் வரையப்படும் பாரம்பறிய ஓவியக்கலையை ஊக்குவித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அக்ரலிக் மற்றும் ஆயில் பெயிண்டிங்கில் தான் வரைந்த இயற்கையை பாதுகாக்கும் தாமரைக் குளம், கிராம சூழல், கண்கவர் பூஜாடி அருவிக்கு வந்து யானைகள் தண்ணீர் குடிக்கும் காட்சிகள், மனிதர்களின் உருவப்படம், ஒரு பொருளை நேரடியாக பார்த்து வரைந்த ஸ்டில் லைப் படங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தார்.

பாரம்பரியமிக்க கையால் வரையப்படும் ஓவியங்கள் சிற்பங்கள் அழிந்து போகாமல் இருக்க இந்த ஓவியக்கண்காட்சி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News