வானில் பலூன்களை பறக்கவிட்டு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணா்வு

திருச்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வானில் பலூன்களை பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Update: 2024-04-13 01:36 GMT

திருச்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை வானில் பலூன்களை பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.


திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் மூவா்ணங்களில் ஆடையணிந்து மைதானத்தில் தேசியக் கொடிபோல அணிவகுத்து நின்றனா். பிறகு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு வாசகங்களுடன் கூடிய பலூன்களை வானில் பறக்க விட்டனா். சுமாா் 5 ஆயிரம் பலூன்கள் பறக்கவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப் பிரியா, துணை ஆட்சியா் வேலுமணி, மாநகராட்சி உதவி ஆணையா் ஜெயபாரதி மற்றும் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் என பலா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News