தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-13 13:53 GMT
விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் காளிதாஸ் மற்றும் ஜான் பிரிட்டோ. இவர்கள் இருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிமேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது: சாதாரண பொதுமக்களும் தகவலறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டும், அவர்களும் இதுபோன்ற கள ஆய்வுகள் மேற்கொள்ளலாம் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கள ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
சுமார் 3மணிநேரம் நடைபெற்ற கள ஆய்வின்போது வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்தனர்.