மத்திய அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு

ஆற்காடு அருகே மத்திய அரசு திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-12-31 05:29 GMT

உறுதி மொழி 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்திற்கு உட்பட்ட புதுப்பாடி கிராமத்தில்  நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து விழிப்புணர்வு வாகனம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர், ஜெயந்தி பிரபாகரன், ஊராட்சி செயலர் செல்வம், பாஜக ஒன்றிய தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட துணை தலைவர் ஜெயலலிதா, பிரச்சார குழு உறுப்பினர் ஹரி, ஒன்றிய துணை தலைவர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக விழிப்புணர்வு வாகனத்தில் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் சாதனைகள் குறித்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் தபால் துறை, மருத்துவத் துறை, வங்கி துறை, சுகாதார துறை, வேளாண்மை துறை,இந்தியன் கேஸ் உள்ளிட்ட துறையின் கீழ் வருகை தந்த அதிகாரிகள் மூலம் மத்திய அரசினுடைய திட்டங்கள் குறித்து தெளிவாக எடுத்து கூறப்பட்டது. இந்த தகவல்களை கேட்டறிந்த பொதுமக்கள் திட்டத்தில் பயனடையாத பொதுமக்கள் பயனடையும் வகையில் தெரிந்து கொண்டதாக பொது மக்கள் தெரிவித்தனர்.இறுதியாக அனைவரும் இந்திய வல்லரசாக மாற்றுவதற்காக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News