கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு
கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பான திட்டமான கிராம காவல் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு கிராம காவலர்கள் இன்று 15.03.2024 -ம் தேதி தங்களது தொடர் காவல் பணிகளுக்கு மத்தியிலும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் திருட்டு மற்றும் தற்கொலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதன்படி பொதுமக்களிடம் பேசிய கிராம காவலர்கள் பொதுமக்கள் * வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் உள்ள ஜன்னல், வீட்டின் மேற்கூரை, அலமாரி, பீரோ, போன்றவற்றின் மீது சாவியை வைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும்
விடுமுறை காலம் வருகிறது என்பதால் நீண்ட நாள் பயணமாக வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது தங்களது கிராம காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டை பாதுகாப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். * தற்கொலைகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்றும் தங்களது குழந்தைகள் அல்லது பெரியவர்கள் எவராயினும் அவரிடம் ஆறுதல் தரும் வகையில் பேசி பழகுங்கள்.
வயலுக்கு மருந்து அடிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி போன்ற உயிர்கொல்லி மருந்துகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் தங்களது குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் வழியிலோ அல்லது பள்ளியிலோ வேறு ஏதேனும் இடங்களிலோ பிரச்சனைகள் இருக்கின்றதா என்று பெற்றோர்களாகிய நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி தங்களது குழந்தைகளிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அதனை சரி செய்து வையுங்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பணிச்சுமை அல்லது குடும்பப் பிரச்சனை போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரை மருத்துவ ஆலோசனை கொடுத்து அவர்களது மனநிலை அறிந்து அதற்கேற்ற தீர்வு அழளியுங்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேற்கண்ட விஷயங்கள் குறித்து பொதுமக்களிடம் கிராம காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.