கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் விழிப்புணர்வு
கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மின்னணு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
தலுக்கா அலுவலகம்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் நடந்தது.நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் தாலுகா அலுவலகங்களில் ஒருமாதம் விழிப்புணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்த மாதிரி வாக்களிப்பு விழிப்புணர்வு முகாமை, ஆத்தூர் ஆர்டிஓ ரமேஷ் தொடங்கி வைத்தார்.
இதில்பொதுமக்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது, அதனை உறுதிசெய்வது என்பது குறித்து ஆர்டிஓ விளக்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் (பொ) அன்புசெழியன், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் சிராஜூதீன், ஆர்ஐ முனிராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.