கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து விழிப்புணர்வு முகாம் !

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தில் கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்திய முசிறி எம். ஐ. டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள்.

Update: 2024-04-27 09:42 GMT

விழிப்புணர்வு முகாம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டார பகுதியில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூர் அருகே குமரக்குடி கிராமத்தில் கிராமிய மதிப்பீடு வரைபடங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தினார்.

இந்த முகாமில் குமரக்குடி கிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம் ,பருவ கால பயிர்களின் வரைபடம், நீர்ப் பாசன வாய்க்கால்கள் வரைபடம் மற்றும் நகர ஆற்றல் வரைபடம் ஆகியவற்றை வரைந்து கிராமிய மதிப்பீட்டின் வரைபடம் குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கமளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இந்நிகழ்வில் முசிறி எம். ஐ. டி் வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் தி.அபர்னா, மூ. அபிநயா,சே. அபிராமி ரா. அஃப்ரின் பானு,ச.க. அக்ஷயா ச.அனு,ந. அனுஶ்ரீ,ம. ஆரோக்கிய ப்ரனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News