ராகிங் தடுப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்
Update: 2023-11-30 03:44 GMT
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், ராகிங் எதிர்ப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. வாணாபுரம் அடுத்த அரியலுாரில் இயங்கி வரும், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியுமான முல்லைவாணன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ரேவதி வரவேற்றார்.