வரதட்சணை, ஆடம்பர திருமணங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்

வரதட்சணை ஒழிப்பு, ஆடம்பரம், அனாச்சார திருமணத்திற்கு எதிராக தொடர் பிரச்சாரம் செய்யப்போவதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-25 01:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத்தலைவர் கே.ராசிக் முகமது தலைமையில் அதிராம்பட்டினம் கிளை-1 பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது "பொருளியல்" என்ற தலைப்பிலும், மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், "நிர்வாகவியல்" என்ற தலைப்பிலும், மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது "கடந்து வந்த பாதை" என்ற தலைப்பிலும், மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ், "மாவட்டத்தின் அடுத்த செயல் திட்டம்" என்ற தலைப்பில் பேசினர். மேலும், மாநிலச் செயலாளர் தரமணி யாசிர், "ஈமானை காக்கும் கேடயம் தாஃவா பணி" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியை மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்லாஹ் தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்தில் அக்டோபர்-21 முதல் டிசம்பர் -31 வரை வரதட்சணை ஒழிப்பு, ஆடம்பர, அனாச்சார திருமணத்திற்கு எதிராக தொடர் பிரச்சாரம் கிளைகள் தோறும் முன்னெடுக்கப்படும் என தீர்மானித்து செயல் திட்டங்கள் வரையறுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு கடற்கரை சாலை பகுதி நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக மாவட்டத் துணைச் செயலாளர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.

Tags:    

Similar News