மது ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் விழிப்புணர்வு வாசகப் போட்டி ஆகிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/- இரண்டாம் பரிசாக ரூ.3000/- மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் ஆறுதல் பரிசாக ரூ.500/- பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பாராட்டுக் கேடயம் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை தொடர்நது உலக சுற்றுலா தினம்-2023 முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-27 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வித் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் நடனப்போட்டிகள் 28.09.2023 அன்று உலக சுற்றுலா தின கருப்பொருளில் சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவிஆணையர் (கலால்) (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை) குமரன், துணை காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ரமேஷ் ராஜா, திருவண்ணாமலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அஸ்வினி. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.