முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு நாடகம்

ராசிபுரம் அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு நாடகம் நடந்தது.

Update: 2024-03-05 13:13 GMT

ராசிபுரம் அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சி குச்சிக்காடு பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க இளைஞர் அணி சார்பில் நவீன பராசக்தி என்னும் சமூக நாடகம் பேரூர் செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருமான பொன்.நல்லதம்பி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் முன்னதாக குழந்தைகள் பெரியோர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற அறக்கட்டளை தலைவர் சின்னசாமி, செயலாளர் தவமணி, பொருளாளர் செங்கோடன் ஆகியோர் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

Tags:    

Similar News