பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் விதமாக பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு குடோன் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

Update: 2023-10-22 04:30 GMT

விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி விபத்தில்லா தீபாவளி கொண்டாடும் விதமாக பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு குடோன் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறு கையில், பட்டாசு கடை உரிமையாளர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்கள் அரசு வழிகாட்டிய நெறிமுறைகளை பின் பற்றி பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பதிவு செய்த வெடி மருந்து பொருட்களை விட அதிகமாக எடுத்து வரக் கூடாது. போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்ல முறையில் விபத்தில்லாதவாறு தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



Tags:    

Similar News