100% வாக்களிப்பை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
திருப்பூரில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-03-27 08:44 GMT
திருப்பூரில் பாராளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் சிறுபூலுவபட்டி தனியார்மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் முருகானந்தம் கலந்து கொண்டு பேசுகையில் 30 ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றி வருகிறேன் . ஹிந்து முன்னணி மைய புள்ளி திருப்பூர் தான் இந்து முன்னணியின் ஆதரவால் நிச்சயமாக வெற்றி பெறுவேன் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளதாக பேசினார்.. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசுகையில் இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல ஆனால் பல்வேறு தேர்தல்களை சந்தித்து உள்ளோம் . கிளை கமிட்டினர் தெருவாக சென்று பொது மக்களை சந்தித்து 100% வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். அகன்ற பாரதம் அமைய வேண்டும் என்று கோபால் ஜி கூறியுள்ளார் . அதற்கு பலமான பிரதமர் மோடி வேண்டும். தேசபக்தி உள்ள பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் கோட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்ம்ஸ்டாங் பழனிசாமி , இந்து முன்னணி பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாநிலச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..