இணைய வழியில் பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு
இணைய வழியில் மோசடி செய்யும் கும்பல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மயிலாடுதுறை போலீசார் பேருந்தில் ஏறி பயணிகளிடம் விளக்கி பிரசுரங்களை வழங்கினர்.
மயிலாடுதுறையில் பொதுமக்களிடம் இணையவழி மூலம் பல்வேறு அரசு நலத்திட்டங்களை போலியாக பயன்படுத்தி பரிசு விழுந்திருப்பதாகவும், பணபரிவர்த்தனை செயலி மூலம் பெற்றுக்கொள்ள இரகசிய குறியீட்டு எண்ணை கேட்டும் போலியான திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி வருவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
இன்று 21.05.24- காலை மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் முனைவர் சிவசங்கர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆளிநர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
இணையவழி குற்றம் பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரி அல்லது இலவச தொலைபேசி எண் 1930 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் இணையவழி குற்றப்பிரிவு அலைபேசி எண் 9345881636 என்ற எண்ணிற்கும் புகார் அளிக்க கேட்டுகொள்ளப்படுகிறது என துண்டு பிரசுரத்தில் தெரிவித்துள்ளனர்,
மயிலாடுதுறையில் போலீசார் பேருந்தில் ஏறி பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்ளை வழங்கி விளக்கினர்.