கழுவந்தோண்டி பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் பெயரில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் முதன்மை மாவட்ட தலைமை நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கிறிஸ்டோபரின் சீரிய வழிகாட்டுதலிலும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கழுவந்தோண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்,
ஜெயங்கொண்டம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் வட்டசட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான முனைவர் லதா கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். குற்றவியல் நடுவர் நீதிபதி இராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு நீதிமன்ற பணியாளர் செரஸ்தார் இளங்கோ கலந்து கொண்டார். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் வரவேற்று பேசினார். சட்டவிழிப்புணர்வு lநிகழ்ச்சியில் நீதிபதி லதா தலைமை உரையில் பன்னெடுங்காலமாக பெண்களுக்கு எதிரான சமூக சீர்கேடுகள் சட்டத்தின் துணைகொண்டு அகற்ற முடிந்துள்ளது.
இன்று மனித வாழ்வில் கருவில் இருந்து கல்லறைக்கு பிறகும் சட்டத்தின் பாதுகாப்பு உள்ளது. சட்டங்கள் ஓவ்வொரு நாளும் புதிதாக பிறக்கின்றது . சட்டத்தின் கைகள் பெண்கள் குழந்தைகள் மட்டுமல்ல அனைவருக்கும் ஆன பாதுகாப்பை உறுதி செய்கிறது . அந்த வகையில் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு சிறப்பாகசெயல்பட்டு வருகிறது என்பதை கூறி சட்ட விழிப்புணர்வு உரையில் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் நீதிபதிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்த விழிப்புணர்வு முகாமை வட்ட சட்ட பணிகள்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளரும் மற்றும் சட்ட தன்னார்வலருமான புனிதா பஞ்சாய த்து தலைவர் மற்றும் செயலாளரருடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.