புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பான் மசாலா,புகையிலை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-11-27 13:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மன்னார்குடி தாமரை குளம் அருகில் பிஎம்எம் திருமண மண்டபத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மன்னார்குடி நகர வர்த்தக சங்கத்தினர் மற்றும் பெட்டிக்கடை உரிமையாளர்களை அழைத்து பான் மசாலா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எஸ்பி எடுத்துரைத்தார்.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவோர் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடைகளுக்கு சீல் வைப்பதுடன் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.

Tags:    

Similar News