காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பழையசிறுவங்கூரில் காவல்துறை சார்பில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-28 07:41 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பழையசிறுவங்கூரில் காவல்துறை சார்பில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நேற்று நடந்தது. வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூரில் காவல்துறை சார்பில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் செல்விபால்ராஜ் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., உஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இன்ஸ்பெக்டர் கணபதி' பாகுபாடின்றி உள்ள பொதுமக்கள் வசிக்கும் கிராமத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதிவழங்குகிறது.

கஞ்சா, சாராயம் விற்பனை செய்பவர்கள் குறித்த தகவலை எஸ்.பி., அலுவலகத்தில் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விபரம் பாதுகாக்கப்படும், குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என பேசினார். நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன், ஊராட்சி செயலாளர் மாரிமுத்து, ஜேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News