மாணவிகள் மற்றும் குழந்தை கடத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்களின் மீதும் அதனை பகிர்வு செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை
மாணவிகள் மற்றும் குழந்தை கடத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக குழந்தை கடத்தல் என பொய்யான காணொளி பதிவுகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தது தொடர்பாக பொய்யான வீண் வதந்திகளை பதிவேற்றம் செய்பவர்களின் மீதும் அதனை பகிர்வு செய்பவர்கள் மீதும் சமூக ஊடகப் பிரிவு மூலம் கண்காணித்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே இது தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்து இருந்தார்கள்.
மதுரை மாநகருக்கு உட்பட்ட தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி, வேலம்மாள் மெடிக்கல் காலேஜ், திருப்பரங்குன்றம் சௌராஷ்டிரா காலேஜ் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பெண்கள் கல்லூரி, அனுப்பானடி NMR பெண்கள் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, செந்தமிழ் கல்லூரி, டி.பி.ரோடு இறையியல் கல்லூரி, அவுட் போஸ்ட் காமராஜர் யுனிவர்சிட்டி கல்லூரி, திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரி, விளாங்குடி பாத்திமா கல்லூரி, கோரிப்பாளையம் மீனாட்சி கல்லூரி, கே.கே.நகர் வகுப்பு வாரிய கல்லூரி, அண்ணாநகர் அம்பிகா கல்லூரி மற்றும் அல்ட்ரா பெண்கள் கல்லூரி என 19 பெண்கள் கல்லூரிகளில் சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்படும் செய்தி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே ஏற்படும் அச்சங்களை போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீண் வதந்திகளை பரப்புவோர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பாக காவல்துறை உதவி எண் 100 ல் புகார் தெரிவிக்கலாம் எனவும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அந்தந்த கல்லூரிகளின் பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.