100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு.

Update: 2024-03-20 07:35 GMT

விழிப்புணர்வு பேரணி 

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரையின்படி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் பழனிவேல் ஆகியோர் வாக்குகளின் முக்கியத்துவத்தையும், வாக்களிப்பதன் அவசியத்தையும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதனையும் வாக்காளர்களின் உறுதிமொழியில் வலியுறுத்தினர்.இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் வருவாய் வட்டாட்சியர் பழனிவேல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேரணி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் பள்ளியை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் முத்துச்செல்வன், வட்டாட்சியர் பழனிவேல், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News