மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

கோலியனூர் மேற்கு ஊ.ஒ.நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Update: 2024-03-13 04:57 GMT

விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் உள்ள கோலியனூர் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் கெளசர் துவக்கி வைத்தார். பேரணியை துவக்கி வைத்து அவர் பேசுகையில் அரசு பள்ளியின் சிறப்புகள் அரசு பள்ளியின் அரசின் நலத்திட்டங்கள் ,தமிழ் வழிக்கல்வியின் சிறப்புகள்,எதிர் கால வேலைவாய்ப்புத் திட்டங்கள், தேர்வு வகைகள், Smart class, பள்ளியில் அடிப்படை வசதிகள்,பயன்பாடு ஆகியவற்றை பற்றி பெற்றோர்களிடமும்,பொது மக்களிடம், விளக்கிக் கூறி,தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்திட பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.அதைத்தொடர்ந்து பள்ளியில் சேர்க்கை செய்த குழந்தைகளுக்கு பாடநூல்கள் ,குறிப்பேடுகள் ,சீருடைகள் வழங்கிச்சிறப்பித்தார்.பேரணி நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் இரவிசந்திரன்,தேன்மொழி,ஊராட்சி மன்ற தலைவர் கண்மணி கன்னியப்பன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசி, Fellowship ரூபி , ஊராட்சி / உறுப்பினர்கள் , SMC தலைவர் சீத்தா, து.தலைவர்/உறுப்பினர்கள், ITK தன்னார்வலர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தலைமை ஆசிரியர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News