குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி

Update: 2023-11-14 06:27 GMT

விழிப்புணர்வு பேரணி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் குறித்த குழந்தைகளுக்கான நடைபயண விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். மேலும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் திருமாவளவன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கையெழுத்திட்டனர். குழந்தைகளுக்கான நடை பயண விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தூய நெஞ்ச கல்லூரிவரை சென்று முடிவுற்றது. பேரணியில்   குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் வன்முறைகளைத் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
Tags:    

Similar News