வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து 100% வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-27 07:37 GMT

விழிப்புணர்வு பிரச்சாரம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்களிப்பது குறித்து 100 சதவீத விழிப்புணர்வு பிரச்சாரம் உதவி தேர்தல் அலுவலர் தனப்பிரியா தலைமையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி, வட்டாட்சியர் ஆறுமுகம், பி.டி.ஓ.சுருளி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏப்ரல் 19 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது விழிப்புணர்வு ஊர்வலத்தை குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து உதவி தேர்தல் அலுவலர் தனப்பிரியா துவக்கி வைத்தார். இந்த ஊர்வலமானது நிலையம், ஸ்தூபி கடைவீதி, பஸ் நிலையம் காவல் நிலையம் வழியாக பேரூராட்சியை அடைந்தது, ஊர்வலத்தின் போது வாக்களிப்பது ஜனநாயக கடமை, நல்லாட்சி அமைய வாக்களிப்போம், வாக்களிப்பது நமது அடிப்படை உரிமை, ஜனநாயகத்தை காக்க வாக்களிப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் மகளிர் திட்ட மாவட்ட பயிற்றுநர் பெருமாள், துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வி.ஏ.ஓ.சின்னசாமி நாராயணமூர்த்தி, மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News