உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு !

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

Update: 2024-04-08 10:07 GMT

விழிப்புணர்வு 

ஈரோட்டில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மோனிகா டயபடிக் சென்டர், மோனிகா கால் புண் சிகிச்சை மையம், இதயம் நற்பணி இயக்கம், தன்வந்திரி செவிலியர் கல்லூரியின் மாணவ-மாணவிகள் செவிலியர் சங்கம் இணைந்து சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

விழாவுக்கு தன்வந்திரி கல்லூரியின் சேர்மேன் டாக்டர் கணபதி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் பத்மாவதி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மோனிகா டயபடிக் சென்டர் டாக்டர் தங்கவேலு பங்கேற்று, உலக சுகாதார நடைமுறை பற்றியும், சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து சுகாதாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, சுகாதாரம் குறித்து மாணவ-மாணவிகளின் உரையாடல்களும் நடந்தது. இதில், மருத்துவர்கள் சுகாதாரம் சார்ந்த கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News