உழவர் சந்தையில் பொருட்கள் விற்க விழிப்புணர்வு
காய்கறி விவாசாயிகளை உழவர் சந்தையில் விளை பொருட்களை விற்பனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.;
Update: 2023-10-29 07:14 GMT
உழவர் சந்தை குறித்த விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் கிராமத்தில் காய்கறி சாகுபடி செய்துள்ள விவசாயிகளை சந்தித்து காய்கறி விவாசாயிகளை உழவர் சந்தையில் விளை பொருட்களை விற்பனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தங்களது காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை உழவர் சந்தைக்கு கொண்டுவந்து எந்தவித கமிஷன் இல்லாமலும், இடைதரகர் இல்லாமலும் நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்திடலாம் என எடுத்து கூறப்பட்டது. மேலும் தங்களது சிட்டா அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, நில வரைபடம், ஆதார்கார்டு மற்றும் புகைப்படத்தினை கொடுத்து அடையாள அட்டை பெற்றுகொள்ளலாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் வணிகம் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.