சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி!
சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி ஆரணியில் நடைபெற்றது;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 10:36 GMT
சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாகன பேரணியை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.