அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு வீடியோ

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு வீடியோ

Update: 2024-02-14 10:48 GMT
பெரம்பலூர் மாவட்டம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது....... கலால் துறையும், செய்தி மக்கள் தொடர்பு துறையும் இணைந்து போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படங்களை திரையிடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதாலும், மது அருந்துவதாலும் உடலுக்கு என்னென்ன தீங்கு விளையும் என்பது குறித்தும் அவற்றிலிருந்து மீள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன எல்இடி வாகனத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களுக்கு தெரிவித்துக் காட்டப்பட்டது, இதில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம், ஆலத்தூர், சிறுவாச்சூர், பாடாலூர், வரகூர், குன்னம், பேரளி, மேலமாத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் மற்றும் எறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு காட்டப்பட்டது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் விழிப்புணர்வு குறும்படத்த திரளான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
Tags:    

Similar News