அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள்
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகவிழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்கப்பட்டன;
குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்கப்பட்டன
நாமக்கல் மாவட்டம் .குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகவிழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் வழங்கப்பட்டன அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை தேசிய அளவில் பெரும்பாலோர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் விட்டலபுரி ராமர் கோவில், பாண்டுரங்கர் கோவில் உள்ளிட்ட 14 கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொது செயலர் சரவணராஜன், நகர தலைவர் சேகர், முன்னாள் நகராட்சி தலைவர் சிவசக்தி தனசேகரன் உள்ளிட்ட பலர் அன்னதானம் வழங்கினர். சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.