அயோத்தி கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் விநியோகம்

இந்து முன்னணி சார்ப்பில் சோ்ந்தமரத்தில் வீடுவீடாக கும்பாபிஷேக அழைப்பிதழ் விநியோகம் செய்தனர்.

Update: 2024-01-06 13:14 GMT

கும்பாபிஷேக அழைப்பிதழ் 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் சோ்ந்தமரம் பகுதியில் பாஜக, இந்து முன்னணி சாா்பில் அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வீடு, வீடாக வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலா் எஸ்.பால்ராஜ் தலைமையில் மக்களிடம் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டதுடன், கும்பாபிஷேக நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுமாறு வேண்டுகோள் விடுத்தனா். இந்நிகழ்ச்சியில், சமுதாய நல்லிணக்க பேரவை நிா்வாகி ஜி.வரதராஜ், விஸ்வ ஹிந்து பரிஷத் ஒன்றியத் தலைவா் முருகன், பாஜக ஒன்றிய துணைத் தலைவா் ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News