ஆதனூரில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்ட பதிவு
பாரதப் பிரதமரின் நலத்திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனூரில் ஞாயிற்று கிழமை பாஜகவின் மத்திய அரசு நலதிட்ட பிரிவின் சார்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் பாரதப் பிரதமரின் நலத்திட்ட முகாம் நடை பெற்றது. முகாமிற்கு மாநிலச் செயலாளர் சைதை சங்கர் தலைமை தாங்கினார்.வடக்கு மண்டல் தலைவர் குணாநிதி முன்னிலை வகித்தார்.முகாமில் ஏராளமான பொதுமக்களுக்கு பாரதப்பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா கடன் வசதி திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம் பதிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் தெற்கு மண்டல தலைவர் சேட்டு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன், முன்னாள் மாவட்ட நிர்வாகி நீலமுருகன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணைத்தலைவர் அறிவுடைநம்பி. ஒன்றிய செயலாளர் சுதாகர், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் வேல்முருகன், கூட்டுறவு மா வட்ட துணைத் தலைவர் வேலு உள்ளாட்சி பிரிவு மா வட்ட செயலாளர் சரவணன், நெசவாளர் ஒன்றிய துணைத் தலைவர் ரகுபதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாரதப் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை பொதுமக்க்கள் காணும் வகையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.